CHURCH HISTORY
Rev.EDWARD WEBB
(MISSIONARY)
(1819-1898)
(AMERICAN MADURA MISSION)
Rev. Edward Webb was born in England on the 15th of December in 1819. He was a man of God who involved himself in propagating the Word of God. He dedicated his life in creating and propagating Tamil Musicals in the Tamil soil. Having completed his secular education in Australia and Theology in America, he was ordained as Reverend in 1845. On September 30 of the same year, he married Miss Nancy. The couple were blessed with four sons and four daughters.
On April 29, 1846, with a vision to deliver God’s profound message and liberate the oppressed and the poor, he landed in Madurai with his wife and two other men of God, Rev. James Herrick and Rev J. Rendall. He mastered Tamil with the help of Vedanayaga Shastriyar in Tanjore and went on to become an eminent poet in the language. In the year 1853 along with Vedanayaga Shastriyar, he released the Lyric, “I come as a Sinner! To JESUS the sacrifice who cleanses the SINS!”
“பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே வாறேன்.”
Lyric 184
He was a member of the committee which reprinted the Tamil Bible in 1851 and 1857. He served as missionary at Sivagangai, Cumbum, Palani and Madurai for 18 years and he returned to America in the year 1864.
On 6th April 1898, he entered the Glory of Our Almighty. Mrs. Nancy lived the rest of her life in pleasant memory of him and followed him in the year 1902.
Mr. Edward Allyn Webb, the son of Rev. Edward Webb was a well-known businessman in United States of America. He wanted to build an inimitable and unique church in the name of his loving Father Rev. WEBB in Tamil Nadu where he was born and with deep love and affection, he donated 5000 Dollars for this.
In 1920, Mr. Edward Allyn Webb donated from his heart and soul again with Clarion worship and an alluring glass painting of Jesus Christ as the Good shepherd. The cost of building the church at that time was Rs.56,000 built by the Architect Mr. Lawson and Mr. Strong. Mrs. Edward Allyn Webb donated 15,000 dollars and a beautiful Pedal Organ. The Church extended its help physically and monetarily The students and respectable also supported the building contributions.
above its capability. Teachers of Capron Hall work through monetary
1926, Miss Welcher,
On 10th February the American representative of the Women’s Board, with about 1500 members of the Congregation dedicated the Church building in a glorious ceremony. Rev. Rockwell Harmon Potter delivered the message from the oracles of God. Rev. Willam E. Strong offered the dedicated supplication of prayer.
“People who walked in darkness saw a marvelous and great light” Is 9:2 The poor tasted the love of Jesus Christ. The symbol of proclamation, the Gospel of God and the sacrifice of Rev. Webb now stands strong with His name WEBB MEMORIAL CHURCH.”


photo credit to https://www.findagrave.com/memorial/73428787/edward-webb

ஆலய ஊழியங்கள்
ஓய்வுநாள் பள்ளி
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து,
அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்,
“நீதிமொழிகள் 22:6

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது பழமொழி” ஐந்து வயதில் இயேசு கிறித்து பற்றிய அறிவை, இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை வழங்குவதன் மூலம், அவர்கள் பெரியவர்களான பிறகும் தங்களின் வாழ்க்கையை நன்னெறிப்படுத்திக் கொள்வதற்கு வழியேற்படுகின்றது.
இக்கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் இடம் பெற்றுள்ள திருவசனம். குழந்தைகளை வழி நடத்த வேண்டிய வழியிலே நடத்த வேண்டும். அப்போது அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் என்பதாகும்.8
ஓய்வு நாட் பள்ளிகளில், கிறித்தவக் கல்வி சிறுவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன் நோக்கங்களாக,
(அ)சிறுவர்கள், சிறுமியர்கள் வேத அறிவு பெறவும், கடவுளை விசுவாசித்து அவருடன் உறவு கொண்டு வாழவும்.
(ஆ) இயேசு கிறித்துவை நேசிக்க, அவரைத் தங்கள் சொந்த மீட்பராக ஏற்றுக் கொள்ளவும்.
(இ) தூய ஆவியானவரை, தங்கள் வாழ்க்கையில் வழி நடத்துபவராக ஏற்றுக் கொள்ளவும்
(ஈ) கிறித்துவின் இல்லமாக, வாழ்க்கை நடத்தவும்
(உ) திருச்சபையின் ஐக்கியத்தில் வாழவும், வளரவும்
(ஊ)இறைவனின் திருவார்த்தையை நேசித்து, அறிந்து அதற்குக் கீழ்ப்படியவும். தங்களுடன் வாழும் அனைவரிடமும், அன்பாகப் பழகவும் அவர்களுக்குச் சேவை செய்யவும்.
ஆகிய கருத்துக்கள் மையமாக அமைகின்றன.
உவெப் நினைவாலயத்தில் ஒய்வு நாட்பள்ளி சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது என்பதை உற்றுநோக்கல் வழி காண முடிந்தது. ஆரம்ப நாட்களில் கேப்ரன் ஹால் பெண்கள் பள்ளியில், சிறுவர்களுக்கென்று நடத்தப்படும் ஆராதனையாக ஓய்வுநாட்பள்ளி நடைபெற்று வந்தது. பின்னர் ஆலயத்தில் ஞாயிறு தோறும் பிற்பகல் வேளையில் நடைபெற்றது. 1984ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஞாயிறன்று ஆலய ஆராதனை நடைபெறும்போதே ஆலயத்தின் பின்புறத்தில் நடத்தப்பட்டது. இப்பொழுதும் ஆலய ஆராதனை நடைபெறும்போது, ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள சபாவில் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது.
பெண்கள் ஐக்கிய சங்கம்

பெண்கள் ஐக்கிய சங்கம்
ஐக்கியம் என்பது வடச்சொல், இதன் பொருள் ஒற்றுமை என்பதாகும். பெண்கள் பலர் ஒன்றுமையுணர்வுடன் இணைந்து, இறைவனை வணங்கும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும் அமையும் கூட்டமே பெண்கள் ஐக்கிய சங்கமாகும். தென்னிந்தியத் திருச்சபையில் பெண்கள் ஐக்கிய சங்கத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் எல்லா திருமண்டலங்களிலும் பெண்களுக்கென, தொண்டுகள் பல நடைபெற்று வந்தன. சில திருமண்டலங்களில் இத்தொண்டு “பெண்கள் உதவிச் சங்கம்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. பெண்களுக்கென இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு அமைப்புகளை, ஒரு கட்டிற்குள் கொண்டுவர பெண்கள் ஐக்கிய சங்கம் உருவாக்கப்பட்டது.
தொடக்க காலம் முதல் தென்னிந்தியத் திருச்சபை நகரத்தவராயினும், கிராமத்தவராயினும், திருமணமானவராயினும், தனிப்பட்டவராயினும், கிராம முன்னேற்றத்தில் ஒவ்வொரு பெண்ணையும் ஈடுபட வைத்தது. இறைவனை வேண்டுதல், சமூகப்பணி, தினசரி வழிபாடு, முன்மாதிரியான வாழ்க்கை ஆகிய இவற்றில் ஒன்று சேர்ப்பதே இதன் முதன்மையான நோக்காக அமைந்தது. தற்போது படிப்படியாக வளர்ச்சி பெற்று,
(அ) இறைவேண்டலிலும், சேவையிலும், சாட்சியிலும் உறுப்பினர்களை ஒருமைப்படுத்துதலும்
(ஆ)உண்மையான இறைவழிபாடு வாழ்க்கை முன் மாதிரியாகத் திகழ்தலும். (இ)கிறித்துவ திருமணத்தின் தூய்மையை உயர்த்துதலும்.
ஈ), தங்களின் குழந்தைகளை கிறித்துவ முறையில் வளர்க்கும் பொறுப்பில் அவர்களுக்கு உதவி செய்தலும்’
ஆகிய இவைபோன்ற நோக்கங்களைக் கொண்டு பெண்கள் ஐக்கிய சங்கம்
சடையின் பணிகளுக்காகப் பணம் திரட்டுவதிலும், இறைவனிடம் வேண்டுவதிலும், செயல்படுவதிலும் இச்சங்கம் சபைக்கு வல்ல கருவியாய் அமைந்திருக்கின்றது. இந்த சங்கம் தென்னிந்தித் திருச்சபையைச் சேர்ந்த பெண்கள் அனைவரையும் கிறித்தவ சாட்சியிலும் திருச்சபை சேவையிலும் கிறித்துவின் வருகையைப் பரவச் செய்வதிலும் ஒரே கூட்டமாக இணைந்து செயல்படுகின்றது. இதனால் பெண்கள் ஐக்கிய சங்கமானது, திருச்சபையின் வாழ்க்கையிலும், அலுவல்களிலும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதில் அங்கத்தினராக இணைக்கப்படும் பெண்கள் அனைவரும், பெண்கள் ஐக்கிய சங்கத்தில் அங்கத்தினராக இணைக்கப்படுகின்றனர்.
பெண்கள் ஐக்கிய சங்கம் கொண்டாடும் விழாக்கள்
(அ) பெண்கள் ஐக்கிய சங்க தோத்திரப் பண்டிகையைத் தென்னிந்தியத் திருச்சபையின் பிறந்த நாளாகிய செப்டம்பர் மாதம் 27 ஆம் நாளுக்கு
நெருங்கிவரும் நாட்களில் கொண்டாடப்படுகின்றது.
பாக்கியவதி பரிசுத்த கன்னி மரியம்மாளின் மங்கள வாக்குத் திருநாளாம், மார்ச்சு மாதம் 25 ஆம் நாளில் அந்நாள் கொண்டாடப்படுகின்றது.
கிறித்தவ இல்லப் பண்டிகை
(பெண்கள் ஞாயிறு (ஜூன் மாதம் 3வது ஞாயிறு) 10
போன்ற நாட்களில் விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.”
சிலர் ஒன்றாக இணைந்து ஓரிடத்திலே கூடும் போது அவர்களின் நடுவில் இருக்கிறேன்” என்ற இயேசு கிறித்துவின் வார்த்தையின்படி பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் நிரந்தர உறுப்பினராகிய ஐம்பது பெண்களும் ஆலய ஆராதனை முடிந்தவுடன் ஆலய சபா மண்டபத்தில் கூடுகின்றனர். சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான பயிற்சிகளும்சிறப்புக்காலச் செய்திகளும், போதகரின் மனைவியாலும் பெண்பிரசங்கிமாராலும்,ஊழிய நிறுவனத்தாலும், வாரந்தோறும் வழங்கப்படுகின்றது.
பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து, திருச்சபையின் வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இறைவனை வேண்டுகிறார்கள். சில சமயங்களில் மாதந்தோறும் நான்காம் ஞாயிற்றன்று நடைபெறும் நற்செய்திப் பணியிலும் பங்கு பெறுகின்றனர். தாய்ச்சபையில் பெண்கள் ஐக்கியச் சங்கம் நடத்தும் சிறப்பு ஆராதனைகளில் கிளைச் சபைகளும் மிக உற்சாகமாகப் பங்கு பெறுகின்றனர்.
உவெப் நினைவாலயத்தில் இயங்குகின்ற பெண்கள் ஐக்கிய சங்கம் பெண்களையும், திருச்சபையையும் சிறந்த பாதையில் வழிநடத்துகின்றன.
ஆண்கள் ஐக்கிய சங்கம்

ஆண்கள் ஐக்கிய சங்கம் கடந்த 2001 ஆம் ஆண்டு அருள்திரு ஜான் கிருபாகரன் ஐயா அவர்களால் நமது ஆலயத்தில் துவங்கபட்டது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வாரமும் 10 முதல் 15 பேர் வரை கூடி ஜெபித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக சனி கிழமைக்கு பதிலாக இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை முடிவில் இந்த கூடுகை நடைபெற்று வருகிறது . நமது திருச்சபையின் உதவி குருவானவர் மற்றும் பயிற்சி குருவானவர் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது . இந்த கூடுகையின் முக்கிய நோக்கம் நமது ஆலயத்திற்காக ஜெபிப்பது மற்றும் ஆலய காரியங்களிலும், ஊழியங்களிலும் பங்கு பெறுவது. இந்த கூடுகையில் நமது திருச்சபையின் மூத்தோர் பங்கு பெறுவதால் அவர்கள் மூலமாக திருச்சபைக்கு ஒரு சிறந்த நிர்வாக குழுவை தேர்ந்தெடுப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
வாலிபர் கூடுகை

வாலிபர் கூடுகை கடந்த 25 ஆண்டுகளாக நமது சபையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஆண்களுக்கு வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம் என்றும் பெண்களுக்கு வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் என்றும் நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் திரு திலகர் கிருபாகரன் ஐயா அவர்கள் தலைமையிலும் வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் டாக்டர் ஹெப்சிபா பியூலா புனிதா ஜெயராணி அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வந்தது. பின்னர் திரு திலகர் கிருபாகரன் ஐயா அவர்களின் மறைவிற்குப் பின்பு திரு பிரேம்குமார் பால்ராஜ் அவர்களால் தொடர்ந்து நடத்தபட்டு வந்தது. தற்பொழுது வாலிபர் ஆண்கள் மற்றும் வாலிப பெண்கள் கூடுகையாக இணைத்து வாலிபர் கூடுகையாக சகோதரி கிறிஸ்டி ஜோதி மற்றும் சகோதரி கலா டானியல் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் மூன்றாம் ஞாயிறுக்கிழமை ஆராதனை முடிவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூடுகையின் முக்கிய நோக்கம் வாலிப சகோதர சகோதரிகளை கர்த்தருக்குள் வழிநடத்துவது, எழுத்து தேர்வுகள் மூலம் அவர்களுக்கு வேதத்தை ஆழமாக போதிப்பது. மேலும் மற்ற வெளி திருச்சபைகளுக்கு சென்று போட்டிகள் மற்ற காரியங்களிலும் பங்கு பெற செய்வது. திருச்சபையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களுடைய பங்களிப்பை உறுதி செய்வது.
ஜெப வீரர்கள் கூடுகை

2021 பிப்ரவரி மாதம் 10 ஜெப வீரர்களால் தொடங்கப்பட்டது.
தற்போது 50 ஜெப வீரர்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்திய தேசத்திற்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும், திருச்சபையினருக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வருகிறார்கள்.
சகோ. J. ஜேக்கப் பால்ராஜ் அவர்களும் திரு. A. தனசேகரன் அவர்களும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
ஜெப வீரர்கள் கூடுகை முடிவில் இக்கூடுகையில் பங்கேற்கும் அனைவருக்கும் Mrs. Evelin Pon Malar குடும்பத்தினர் குக்கீஸ் வழங்கி வருகிறார்கள்.
Mrs. Christobel Bobby, நாகர்கோயில் குடும்பத்தினர் பிஸ்கட் காபி வழங்கி வருகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் ஆலய குடும்ப உதவி திட்ட பயனாளர்கள் 30 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நான்கு பங்காளர்கள் மூலம் கோதுமை சேமியா ரவை போன்ற பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது பிறந்தநாள், திருமண நாள் மற்றும் முன்னோர்களின் நினைவு நாட்களின் போது இரவு உணவு, பெட் சீட், எவர்சில்வர் தட்டு போற்ற பொருட்கள் ஆலய குடும்ப உதவி திட்ட உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது.இத்திட்டங்களில் மூலம் அனேக ஏழை குடும்பத்தினர் பொருள் உதவியும் பண உதவியும் பெற இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது
முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்

முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்
நமது திருச்சபையில் மருத்துவ செலவு செய்ய இயலாத 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவும் வண்ணமாக மருத்துவ நிதி உதவி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் பங்காளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500 அல்லது 1000 அளித்து இத்திட்டத்தை தாங்கி வருகின்றனர் . இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு ஆராதனை முடிவில் திரு டேனியல் ராஜேந்திரன் ஐயா அவர்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது.
இலவச தையல் பயிற்சி பள்ளி

இலவச தையல் பயிற்சி பள்ளி
இத்திட்டமானது நமது திருச்சபையின் பங்காளர்கள் மூலமாக ஆறு தையல் இயந்திரங்களும், தலைமை குருவானவர் அருட்திரு ஞான ஆனந்தராஜ் ஐயா அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒரு தையல் இயந்திரமும், திருமண்டிலத்தின் சார்பாக மூன்று தையல் இயந்திரங்களும் ஆக பத்து தையல் இயந்திரங்கள் பெறப்பட்டு திருச்சபையை சுற்றிலும் உள்ள அனைத்து மதத்தினருக்கும் இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பங்காளர்கள் மூலம் ரூ 500 பெறப்பட்டு தையல் பயிற்சி யாளருக்கு முதல் வாரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. திருமண்டிலத்தின் மூலம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்வு வைக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. திரு மண்டிலம் மூலம் மேற் பார்வையிடப்படுகிறது